செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

கன்னி: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்): கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும்கொண்ட கன்னி ராசி நேயர்களே! இந்த மாதம் பிரச்சினைகள் அனைத்தும்விலகி அனுகூலமான பலன் உண்டாகும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள்விலகி ஒற்றுமை பலப்படும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும்.
 
குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதாரநிலையும் மிகச்சிறப்பாக அமைவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நட்பு மலரும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
 
தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலனை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
 
உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.
 
பெண்களுக்கு உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். அழகான புத்திரபாக்கியத்தையும் பெற்றெடுப்பர்.
 
அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.
 
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
 
உத்திரம் - 2, 3, 4: இந்த மாதம் சரக்குகளை நல்ல விலைக்கு விற்பீர்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். புத்திர பாக்கியத்தை அடைவீர்கள். நீண்ட காலமாகத் தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள்.
 
ஹஸ்தம்: இந்த மாதம் பொதுமக்கள் சேவையில் நல்ல பெயரையும் புகழையும் அடைவார்கள். உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும்.
 
சித்திரை - 1, 2: இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் அரசுக்குச் செலுத்தவேண்டிய வரி பாக்கிகளால் அரசாங்கத்தின் கெடுபிடியை சந்திப்பார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை.
 
பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Oct 18, 19; Nov 14, 15
 
சந்திராஷ்டம தினங்கள்: Oct 25, 26.